செய்திகள்

ரஷ்யாவில் பல்கலைக்கழகமொன்றில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி!

ரஷ்யாவின் பேர்ம் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலையில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் ஒருவர், அங்கு சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

இதன்போது, பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்த அறைகளை மூடிக்கொண்ட அதேநேரம் மற்றையவர்கள் அறை ஜன்னல்கள் வழியாக குதித்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .
-(3)