செய்திகள்

ரஷ்யாவும் குரோஷியாவும் காலிறுதிக்கு தெரிவானது

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டித் தொடரில் நேற்றைய தினம் ஸ்பெயினுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற ரஷ்யா காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.
இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரு கோல் வீதம் பெற்றதன் காரணமாக, வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்கென மேலதிக நேரத்தை வழங்க நடுவர்கள் தீர்மானித்தனர்.
இரண்டு அணிகளும் கோல்களைப் போடாததால் பெனால்டி அடிப்படையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் போது ஸ்பெயின் வீரர்கள் அடித்த இரண்டு பெனால்டி கோல்களை ரஷ்ய கோல் கீப்பர் தடுத்தார். இதனால், ரஷ்யா வெற்றி பெற்றது.
இதேவேளை, டென்மார்க் அணியுடன் நேற்று இடம்பெற்ற மற்றைய போட்டியில் வெற்றி பெற்று குரோஷியாவும் காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவானது. இந்தப் போட்டியின் வெற்றி தோல்வியும் பெனால்டி அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
காலிறுதிச் சுற்றில் ரஷ்யாவுக்கும் – குரோஷியாவுக்கு;ம இடையிலான போட்டி எதிர்வரும் 7ம் திகதி சொச்சி நகரில் நடைபெறும். -(3)