செய்திகள்

ரஷ்ய பிரஜை கடலில் மூழ்கி பலி!

நேற்று வெள்ளிக்கிழமை ரஷ்ய பிரஜையொருவர் (வயது 40) ஹிக்கடுவ திரணகம கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் மூழ்கிய ரஷ்ய பிரஜையின் சடலம், பொலிஸ் மற்றும் கடற்படை சுழியோடிகளினால் மீட்கப்பட்டுள்ளது. தற்போது சடலம் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.