செய்திகள்

ராகம ரயில் நிலைய நீர் தாங்கியினுள் சடலம்

ராகம ரயில் நிலையத்தின் மலசல கூட நீர் தாங்கியிலிருந்து  சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
நீர் தாங்கியில் சடலமொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலொன்றையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.
குறித்த தாங்கியில் விழுந்தே இந்த மரணம் ஏற்றபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அங்கு விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.