செய்திகள்

ராகலை தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

ராகலை – சூரியகந்த பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை தேயிலையை உலர்த்துவதற்காக பயன்படுத்தப்படும் இடத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த தொழிற்சாலை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேலும் சம்பவத்தால் தொழிற்சாலையில் இருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.