செய்திகள்

ராஜதந்திர நடைமுறைகளை மீறி இந்திய தூதரக நிகழ்வில் பங்குகொண்ட ரணில் (படங்கள்)இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வரவேற்பு வைபவத்தில் பாரம்பரிய நடைமுறைகளைத் தாண்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.

வெளிநாட்டுத் தூதரகங்களில் இடம்பெறும் தேசிய தின வைபவங்களில் நாட்டின் அல்லது அரசாங்கத்தின் தலைவர்கள் வழமையாக சமுமளிப்பதில்லை. ஆனால் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குடியரசு தின வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அவர் அதனை ஏற்றுக்கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் பிரதம விருந்தினராக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அழைப்பதாக இருந்தது. ஆயினும் இலங்கை மீனவர்களுக்கெதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை அகற்றுவது தொடர்பாக வேண்டுகோள் விடுப்பதற்காக பிரசல்ஸ்ஸுக்கு அமைச்சர் மங்கள சமரவீர பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரதமரை குடியரசு தின வைபவத்துக்கு அழைத்தமையும் அவர் அதனை ஏற்றுக் கொண்டமையும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான தற்போதைய நல்லுறவின் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை நேற்றுக் காலை இலங்கையில் வசிக்கும் இந்தியப் பிரஜைகள் மத்தியில் குடியரசு தின வைபவத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா ; இலங்கையிலும் இந்தியாவிலும் தேசிய தேர்தல்கள் இடம்பெற்று புதிய அரசாங்கங்கள் பதவியேற்ற பின்னர் இந்த வைபவம் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், இந்த ஆண்டு முன்னொருபோதுமில்லாத வகையில் இரு தரப்பிலிருந்தும் உயர்மட்ட விஜயங்கள் இடம்பெறவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

5

பெப்ரவரி 14, 15 இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதேவேளை மார்ச் 14, 15 இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

06

011 02 2 03 3
04 4 05