செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினரால் பயன்படுத்தப்பட்ட அதிநவீன தியான மண்டபம் கண்டுபிடிப்பு

ராஜபக்ச குடும்பத்தினரால் பயன்படுத்தப்பட்ட அதிநவீன மாளிகை ஓன்றை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 1000 மில்லியனுக்கு மேல் பெறுமதியான இந்த கட்டிடத்தை தியானம்செய்வதற்கு அவர்கள் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
கடவத்தை,இம்புல்கொட பகுதியில் இவ்வாறான பங்களா ஓன்று காணப்படுவதாக தகவல் கிடைத்ததும் தனியார் தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் அங்கு செல்ல முயன்றதாகவும் எனினும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து தான் அவாகளுடன் சென்று அதனை பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எட்;டு ஏக்கர்pல் அமைந்துள்ள குறிப்பிட்ட தியான நிலையத்தை அமைப்பதற்கு பெருமளவு பணம் செலவாகியுள்ளது,நவீன வசதிகள், நூலகங்கள்,ஹெலிக்கொப்டர் இறங்குவதற்கான தனம் போன்றவை அங்கு காணப்படுகின்றன.
ஜனவரி 8 திகதி வரை 60 இராணுவத்தினர் அந்த நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் வலகம்பா மன்னனின் அரண்மனை அமைந்திருந்ததாக கருதப்படுகின்றது.
அங்கு புதையல் தோண்டும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன என்ற சந்தேகம் எழுந்துள்ளது,பாரிய கிடங்குகள் காணப்படுகின்றன.புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் குறிப்பிட்ட மாளிகைக்குள் எடுத்துச்செல்லப்பட்டதை தாங்கள் பார்த்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவளை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பௌத்த மதகுருவொருவர் குறிப்பிட்ட மாளிகை தன்னால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கும் ராஜபக்ச குடும்பத்தினருக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.