செய்திகள்

ராஜபக்ஷக்களின் 18 பில்லியன் ரூபா சொத்து வெளிநாடுகளில் : மங்கள சமரவீர

ராஜபக்ஷ குடும்பத்தினரின் 18 பில்லியன் ரூபா சொத்துக்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தினரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்பதற்கு நான்கு நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள 18 மில்லியன் சொத்து இலங்கையின் ஊழியர் சேமலாப நிதியில் கூட இல்லை இவற்றை மீட்க நீண்ட காலம் எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றுக்கு பதுங்கியபடி சென்ற மஹிந்த ராஜபக்ஷ வெட்கமின்றி பிரதமர் பதவியை கெட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ சிறந்த நண்பர் அவருக்க 70 வயதூகின்றது இனி அவர் தற்போது வீட்டில் இருந்து தர்ம உபதேசங்களை கேட்டுக் கொண்டு ஓய்வெடுப்பது சிறந்தது என மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.