செய்திகள்

ராஜபக்ஷக்கள் திருடர்கள் அல்ல காரணமின்றி எம்மை பழிவாங்குகின்றனர் : மஹிந்த

ராஜபக்ஷக்கள் திருடர்கள் இல்லையெனவும் அப்படி முன் வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டும் நீதி மன்றத்துக்கு வரும் தானே அப்போது அதனை பார்த்துக்கொள்கின்றோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது சகோதரரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை பார்ப்பதற்காக நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது ஊடகங்களுக்க கருத்து தெதரிவிக்கையிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இது பழிவாங்கும் செயல். ஏந்த காரணமும் இன்றி பழிவாங்குகின்றனர். இந்த தீர்மானத்தை அமைச்சரவையூடாகவே மேற்கொண்டுள்ளனர். இனி நமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் வரும். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வரும் போது அதனை பார்த்துக்கொள்கின்றோம். எவ்வாறாயினும் ராஜபக்ஷக்கள் திருடர்கள் அல்ல” என தெரிவித்;துள்ளார்.