ராஜபக்ஷ குடும்பத்துக்கு பதவிகள் வழங்கக் கூடாது சந்திரிகா உறுதி
சுதந்திரக்கட்சியில் மகிந்தராஜபக்ஷவுக்கோ அவரது குடும்பத்தவர்களுக்கோ எதிர்காலத்தில் எந்தவொரு பதவியையும் வழங்குவதற்கு இடமளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கண்டியில் நடந்த சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும்,சுதந்திரக்கட்சியை அழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் தனியான பலம்கொண்ட கட்சியாக சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்புப் போகிறேன்.
எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியே களமிறங்கும் ஊழல், மோசடிகள், முறைகேடுகளில் தொடர்புபட்ட எவரும் அடுத்தத் தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படமாட்டார்கள் எனவும் கடுமையாக தெரிவித்துள்ளார்.