செய்திகள்

ராஜபக்ஸ இந்தியாவையும் சீனாவையும் ஏட்டா போட்டியாக பயன்படுத்தினார்: பிரதமர் ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவையும் சீனாவையும் ஏட்டா போட்டியாக இந்தியாவுக்கெதிராக சீனாவையும் சீனாவுக்கெதிராக இந்தியாவையும் பயன்படுத்தியதாக தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆனால் அவரது தந்திரம் பலிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் என்.டி.டி.வி க்கு நேற்று வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்த அவர் புதிய அரசாங்கம் இலங்கையின் அண்டை நாடுகளுடன் பக்கச்சார்பற்ற கொள்கையை கடைப்பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

சீனாவாக இருந்தாலென்ன வேறு எந்த நாடாக இருந்தாலென்ன வெளிநாடுகளுடன் செய்யப்பட்ட சகல ஒப்பந்தங்களையும் தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் எங்காவது ஊழல் நடைபெற்றிருந்தால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இந்த பேட்டியில் தெரிவித்தார்.