செய்திகள்

ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் 220 நிதி அறிக்கைகளை காணவில்லை : விசாரணை நடத்துவோம் என்கிறார் நிதி அமைச்சர்

மஹிந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான 220 நிதி அறிக்கைகள் காணாமல் போயுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநயக்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சிலிருந்த அறிக்கைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் இது தொடர்பாக தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அந்த விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சிகளில் ஒன்றா இந்த சம்பவம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாகவும் அமைசர் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

N5