செய்திகள்

ராஜபக்‌ஷ யுகத்துக்கு முடிவுகட்ட கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்: ரணில் அறிவிப்பு

ராஜபக்‌ஷ யுகத்துக்கு முடிவு கட்டி ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., மற்றும் ராஜபக்‌ஷவுக்கு எதிரானவர்களுடன் இணைந்து செயற்படுவதற் தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் தலைமையகமான சிறீகொத்தாவில் இன்று நடைபெற்ற தேசிய ரயில்வே சேவைச் சங்கத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதான உரையை நிகழ்த்திய போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, அடுத்ததாக நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஐ.தே.க.வுக்கும் இடையிலான ஒரு போட்டியல்ல. இது ஊழல் மோசடிகள் மிக்க ராஜபக்‌ஷ ஆட்சிக்கு அதற்கு எதிரானவர்களுக்கும் இடையிலான ஒரு போட்டிக்களமாகவே இருக்கும்” எனவும் தெரிவித்தார்.