செய்திகள்

ராஜிதவின் நிகழ்ச்சிநிரல்படி மகிந்தவும் மைத்திரியும் ஒன்றுசேர முடியாது

ராஜிதவின் நிகழ்ச்சிநிரல்படி இரண்டுதலைவர்களும் ஒன்றுசேர முடியாது

ராஜித சேனாரத்ன தனது சொந்த நிகழ்ச்சி நிரல்கள் படி   கருத்துக்களை  வெளியிடுவாராக இருந்தால்  இரண்டு தலைவர்களுக்கும் இடையே ஒற்றுமை  ஏற்பட வாய்ப்பு இல்லை.

தற்போதைய அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன பொய்களை  கூறிவருகிறாரென முன்னாள் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல  கூறியுள்ளார்.

இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ.ல.சு.க. கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கா  வேட்புமனுவை  பெற மாட்டேன் என்று கூறியதாக ராஜித  கடந்த  வியாழக்கிழமை  அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஆனால்  அண்மையில் ஜனாதிபதியை சுதந்திரக்கட்சியினர் சந்தித்தபோது அவ்வாறு நான் கூறவில்லை என்கிறார். எனவே ராஜிதவின் கருத்துதான் அது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு  ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு ராஜிதவின்மீது குற்றம் சுமத்தினார்.