செய்திகள்

ராஜீவ் காந்தி சமஸ்டி தீர்வை இலங்கையிடம் வலியுறுத்தவில்லை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1984- 1989ம் ஆண்டு காலப்பகுதியில், சமஸ்டி தீர்வு ஒன்றை இலங்கையிடம் கோரவில்லை என்று வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா, இலங்கையில் சமஸ்டி தீர்வை கோராது எனினும் தமிழர்கள் விரும்பும் யோசனைகளை அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்க முடியும் என்று ராஜீவ் காந்தியை நாம் சந்தித்த வேளை அவர் குறிப்பிட்டார் என, வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

ஏன் ராஜீவ் காந்தி சமஸ்டியை வலியுறுத்துவதில் இருந்து நலுவினார் என இதன்போது வரதராஜப் பெருமாளிடம் வினவியபோது, அப்போது பஞ்சாப்பில் சுயாட்சி போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா வலியுறுத்தல்களை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் இதன்போது மேலும், கூறினார்.

n10