செய்திகள்

ராஜீவ் கொலையாளிகள் மனிக்கப்பட்டு விடுதலைசெய்யப்படவேண்டும்: இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றச்சாட்டுக்காக சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசரும் இந்திய பத்திரிகை ஸ்தாபனத்தின் முன்னாள் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு தெரிவித்திருக்கிறார்.

ஹைதராபாத் சிறையில் உள்ள அப்புதல் காதர், திஹார் சிறையில் உள்ள தேவிந்தர் பால் சிங் புல்லர், யேரவாடா சிறையில் உள்ள சைபுநிஷா குவாசி, ஆகியோர் போன்று ராஜீவ் காந்தி கொலையாளிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டமையை நான் நியாயப்படுத்தவில்லை. இலங்கைக்கு இந்திய அமைதிகாக்கும் படையை அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் 3000 இந்திய வீரர்களை பலிகொடுத்ததையும் தவிர ராஜீவ் காந்தி என்ன செய்தார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தாதா ? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1984இல் தனது தாயின் படுகொலைக்குப் பின்னர், ராஜீவ்காந்தியின் உத்தரவின் பேரில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, ஒரு பெரும் மரம் விழும்போது அது தரையை உலுப்பாமலா விடும் என்று ராஜீவ் அப்போது கூறியமை, அவர் ஒரு கிரிமினல் என்பதை காட்டியது என்றும் அவர் கூறியுள்ளார்.