செய்திகள்

ராணுவ சீருடை அணிந்த பெண் கைது….

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியில் ராணுவ சீருடை அணிந்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதத்தில் பதன்கோட் டில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான பகுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் ராணுவ சீருடை அணிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ராணுவ சீருடைபோன்ற வடிவமைப்பு கொண்ட ஆடைகளை அணிய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்பகுதியில் ராணுவ சீருடை அணிந்திருந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரைணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் மனநல மருத்துவரிடம் பரிசோதனை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

N5