செய்திகள்

ராணுவ வாகனங்களை வழிமறித்து தலிபான்கள் ஆவேச தாக்குதல்: 11 ஆப்கான் வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனங்களை வழிமறித்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

தங்களை வேட்டையாடும் ராணுவத்தை கலங்கடிக்கும் ‘அஸ்ம்’ என்ற அதிரடி தாக்குதல் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் தலிபான் தீவிரவாதிகள் தொடங்கினர். அதிலிருந்து கடந்த 3 மாதத்தில் சுமார் ஆயிரம் ராணுவ வீரர்களை இவர்கள் கொன்று குவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹேரட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனங்களை வழிமறித்து தலிபான்கள் நடத்திய ஆவேச தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர். நான்கு வீரர்கள் படுகாயமடைந்தனர் என்று ஹேரட் மாகாண கவர்னர் எஹ்சானுல்லா ஹயாத் இன்று தெரிவித்துள்ளார்.