செய்திகள்

ராம்கோபால் வர்மாவுக்கு பதிலடி கொடுத்த பாலிவுட் இயக்குனர்

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான படம் பாம்பே வெல்வெட். மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் வசூலிலும் பின் தங்கியது.

இப்படத்தை பற்றியும், இயக்குனர் அனுராக் காஷ்யப் பற்றியும் ராம்கோபால் வர்மா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியபோது, ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட படத்திற்கு அதன் இயக்குனர் ஆதரவாக பேசுவது எப்படி இருக்கிறது என்றால், ஒரு பெண்ணை பார்த்து நான் என்னை ரொம்ப விரும்புகிறேன் எனவே நீ என்னை விரும்புகிறாயா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை என்று கூறுவது போல் இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலளிக்காமல் மௌனம் காத்து வந்த அப்படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் நேற்று அவருக்கு பதில் ட்விட் செய்துள்ளார். அதில் சார்… ஓட்காவை ஓரமாக வைத்துவிட்டு போய் தூங்குங்கள். ஐ லவ் யு…லாட் ஆப் கிஸ்ஸஸ் என்று பதிலளித்துள்ளார். அனுராக்கின் ட்டுவிட்டிற்கு பதிலளித்த ராம்கோபால் வர்மா, நான் குடிப்பதை விட்டு நீண்ட நாட்கள் ஆகிறது. மேலும் நான் ஆண்களை முத்தமிடுவதில்லை; .ஐ லவ் யு என கூறியுள்ளார்.