செய்திகள்

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவருக்கு எதிரான இரண்டு வழக்குகளில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி 50 இலட்சம் ரூபா அடிப்படையிலான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருதடவை அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக வேண்டும் என்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் பயங்கரவாரத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரின் வீட்டில் இறந்த சிறுமி ஹிஷாலினின் வழக்கிலும் இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கில் இவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
-(3)