செய்திகள்

ருவாண்டா உளவுப்பிரிவு தலைவர் லண்டனில் கைது

 

ருவாண்டா உளவு பிரிவு தலைவர் இம்மானுவேல் கரென்சி கராக்கே, லண்டன் போலீசாரால்இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதான இம்மானுவேல் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி, அவருக்கு எதிராக ஸ்பெயின் பிடி ஆணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

கடந்த 20-ந் தேதி இம்மானுவேல் கைது செய்யப்பட்டதை ருவாண்டா வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து நாளை லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் இம்மானுவேல், பின்னர் ஸ்பெயின் அரசிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது.

இம்மானவேல் கைது செய்யப்பட்டதற்கு, ருவாண்டா வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாட்டவர்களை மேற்கத்திய நாடுகள் இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.