செய்திகள்

ரூ. 8. 5 கோடி ( 32 கிலோ ) தங்க கட்டிகள் சிக்கியது

 நாமக்கல் – சேலம் ரோட்டில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 32 கிலோ தங்கம் சிக்கியது. நாமக்கல் சேலம் ரோட்டில் முதலைப்பட்டி பகுதியில் பறக்கும் படை தேர்ல் அதிகாரி செல்வராஜ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். இரண்டு டெம்போ ஆட்டோக்களில் 32 கிலோ தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த தங்கம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஆகிய பகுதிகளுக்கு வணிக நோக்கத்தில் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆர்.டிஓ., கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

32 கிலோ தங்கம் ( 4 ஆயிரம் பவுன் ) இன்றைய மதிப்பு ஏறக்குறைய 8. 5 கோடி ஆகும்.

N5