செய்திகள்

ரெய்னாவின் திருமண விழாவில் தம்பதி சமேதராக பங்கேற்ற தோனி

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் அவரது பால்யகால ஸ்னேகிதி பிரியங்காவுக்கும் தலைநகர் டெல்லியில் திருமணம் நடைபெற்றது.

புதுடெல்லியில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இதில் ரெய்னாவின் நெருங்கிய நண்பர்கள், தோனி, விராட் கோலி உட்பட ஐபிஎல், இந்திய வீரர்கள், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மணமகள் பிரியங்கா தற்போது நெதர்லாந்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் நீண்ட கால நட்பு இருந்து வந்தது. இன்னும் சொல்லப்போனால் பிரியங்காவின் தந்தை காஸியாபாத்தில் ரெய்னாவின் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வீரர்களான டிவைன் பிராவோ, மைக் ஹஸ்ஸி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரும் திருமண விழாவில் கலந்து கொண்டனர். சீனிவாசன் உட்பட பல பிரபலங்களும் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, தனது பெண் ஸ்னேகிதி அனுஷ்கா சர்மாவுடன் கடந்த புதனன்று திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Raina-marriage_2363588g

suresh-raina-wedding-7
10402478_912933332061694_114824823216266516_n

big_362223_1428087940

images (1)

suresh raina priyana choudhary wedding photo

suresh-raina-wedding-2

suresh-raina-wedding-9

Suresh-Raina-Wedding-702x336

Suresh-Raina-wedding-reception-pics-2