செய்திகள்

ரோகித் சர்மா தலைசிறந்த அணித்தலைவராக வளர்ந்திருக்கிறார்

மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா தலைசிறந்த அணித்தலைவராக வளர்ந்திருக்கிறார் என சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை இரண்டாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது.

தொடக்கத்தில் 6 போட்டிகளில் ஒரு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மும்பை அதன்பின் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவின் நம்பிக்கையும் வீரர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டதும்தான் காரணம் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
மும்பை அணியின் இந்த எழுச்சி மற்றும் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறியதாவது:-

sachinn

மும்பை அணியின் தலைவராகயிருந்து ரோகித் சர்மா என்ன செய்தார் என்று நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் இன்றைய அளவில் அவர் சிறந்த அணித்தலைவர். அவரிடம் அதிக தன்னம்பிக்கை உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தலைவராக அவர் ஏராளமான ஏற்ற இறக்கத்தை கண்டுள்ளார். ஏராளமான சவால்களையும் அவர் சந்தித்துள்ளார். இந்த சவால்கள் மட்டுமே ஒருவரை சிறந்த கிரிக்கெட் வீரராகவும் கடினமான நபராகவும் உருவாக்குகின்றன.2015 இல் ரோகித்தின் வெளிப்பாடு சிறப்பாக இருந்தது. வீரர்கள் அறையில் ஏராளமான ஆலோசனைகளை நாம் கூறுகிறோம். ஆனால் கேப்டன் அதை பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்களுடன் ஒருங்கிணைத்து கொண்டு செல்ல வேண்டும். அதை ரோகித் திறமையாக செய்கிறார்.

இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் கூறினார்.