செய்திகள்

றக்பி வீரர் தாஜு­தீனின் மரணம் கொலையே! சி.ஐ.டி.விசா­ர­ணையில் தகவல்

இலங்கை தேசிய றக்பி அணியின் உப தலைவர் வஸீம் தாஜுதீன் விபத்தில் மர­ணிக்­க­வில்லை எனவும் அவர் கொலை செய்­யப்­பட்­டுள்ளார் எனவும் குற்றப் புல­னாய்வு பொலிஸார் நடத்­திய விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. இந் நிலையில் இந்த கொலை­யுடன் முக்­கிய பிர­முகர் ஒரு­வரின் மக­னுக்கும், அவ­ருடன் இருந்த சில பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கும் தொடர்­பி­ருப்­பது குறித்து புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தக­வல்கள் கிடைத்­தி­ருப்­ப­தா­கவும் அதன்­படி அவர்கள் விரைவில் கைதாகும் சாத்­தியம் காணப்­ப­டு­வ­த­கவும் பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

நார­ஹேன்­பிட்டி பொலி­ஸாரும் கொழு ம்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவும் தொடர்ந்து முன்­னெ­டுத்து வந்த றக்பி வீரர் தாஜு­தீ னின் மரணம் குறித்த விச­ர­ணைகள் கடந்த பெப்­ர­வரி மாதம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் கீழ் அப்­பி­ரிவின் பணிப்­பாளர் நாக­ஹ­முல்­லவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இந் நிலை­யிலே வஸீம் தாஜுதீன் கொலை செய்­யப்­பட்­டி­ருக்கக் கூடிய வாய்ப்­புக்கள் அதி­க­மாக இருப்­ப­தாக புல­னாய்வுப் பிரி­வினர் கண்­ட­றிந்­த­தா­கவும் அது தொடர்­பி­லான ஆதா­ரங்­களை பொலிஸார் திரட்­டி­யுள்­ள­தா­கவும் நீதி­ மன்­றுக்கு அது தொடர்பில் அறிக்­கை­யினை புல­னாய்வுப் பிரி­வினர் தாக் கல் செய்ய தயா­ரா­கி­ வ­ரு­வ­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

வெள்­ள­வத்தை முருகன் வீதியை வதி­வி­ட­மாகக் கொண்ட வஸீம் தாஜு தீன் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நார­ஹேன்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சலிகா மைதானம் அருகே மதில் ஒன்­றுடன் மோதி­ய­வாறு எரிந்­து­கொண்­டி­ருந்த காரில் இருந்து கரு­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டார். இதனைத் தொடர்ந்து நார­ஹேன்­பிட்டி பொலி­ஸாரும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவும் இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தன.

இந் நிலையில் வஸீம் தாஜு­தீனின் பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில் அவ­ரது நுரை­யீ­ர­லுக்குள் காபன் மொனோக்சைட் வாயு நிரம்பி இருப்­பது குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த நிலையில் மர­ணத்தில் சந்­தேகம் நில­ வு­வ­தாக கூறப்­பட்டு அரச இர­சாயன பகுப்­பாய்­வா­ள­ருக்கும் மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்காக பாகங்கள் அனுப்­பப்­பட்­டன.

எனினும் 2012ஆம் ஆண்டு இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்­பி­லான அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளரின் அறிக்கை கடந்த பெப்­ர­வரி மாதமே பொலி­ஸா­ருக்கு கிடைத்­தது. அந்த அறிக்கை ஊடாக அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் தா­ஜு­தீனின் மரணம் குறித்து தெளி­வான ஒரு விட­ய த்தை முன் வைக்க முடி­யாது என குறிப்­பிட்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கப்­ப­டவே பிரேத பரி­சோ­தனை அறிக்கை மற்றும் மேலும் சில தட­யங்­களின் உத­வி­யுடன் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்

அந்த விசா­ர­ணை­க­ளி­லேயே வஸீம் தாஜுதீன் விபத்தில் இறக்­க­வில்லை எனவும் அவ­ரது மரணம் கொலை எனவும் புல­னாய்வுப் பிரி­வினர் கண்­ட­றிந்­துள்­ளனர்.

ஏற்­க­னவே நார­ஹேன்­பிட்டி , சாலிகா மைதா­னத்­திற்கு அருகே வஸீம் தாஜு­தீனின் சடலம் மீட்­கப்­பட்ட போதும் அவ­ரது பணப்பை கிருலப்­பனை பொலிஸ் பிரிவில் இருந்து பின்னர் மீட்­கப்­பட்­டது.

ஹெவலொக் கழ­கத்தின் வீர­ரான தாஜு­தீ­னுக்கும் பிரபு ஒரு­வரின் மக­னுக்கும் இடையே காதலி ஒருவர் தொடர்பில் முர ண்­பா­டுகள் இருந்­தமை தொடர்­பிலும் ஹெவலொக் கழ­கத்தில் இருந்து பிறி­தொரு கழ­கத்­துக்கு தாஜு­தீனை விளை­ யாட கோரி­ய­மையால் ஏற்­பட்ட முரண்­பாடு தொடர்­பிலும் சிற்­சில தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள புல­னாய்வுப் பிரி­வினர் அந்த தக­வல்கள் ஊடா­கவும் விசா ரணைகளை முன்னகர்த்தியுள்ளதாக பொலி ஸ் தகவல்கள் சுட்டிக்காட்டின.

2008ஆம் ஆண்டு இலங்கை தேசிய றக்பி அணியின் உறுப்பினராக இனை த்துக் கொள்ளப்பட்ட வஸீம் தாஜுதீன் கல்கிஸ்ஸை சென்.தோமஸ் வித்தியால யத்தின் பழைய மாணவர் என்பதுடன் 2009ஆம் ஆண்டின் ஜனரஞ்சக றக்பி வீரரு க்கான விருதினையும் அவர் வென்றி ருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.