செய்திகள்

லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை (14) திருடப்பட்டிருந்த ரி-56 ரைபிளும் ஐந்து ரிவோல்வர்களும் லக்கலவிலுள்ள  நீர்த்தாங்கியொன்றுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஆறு மணியளவில் கிடைக்கப் பெற்ற தகவலொன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து ஏறத்தாள ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள வெல்லேவெலவிலுள்ள  சன்டகல விகாரையின் பகுதியில் நீர்த்தாங்கியொன்றுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.

n10