செய்திகள்

லசந்த படுகொலை விவகாரம்: விசாரணை இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, பிரதீப் எத்னெலி கொட காணாமற்போனமை மற்றும் ரகர் வீரர் விக்ரம் தாஜுதீன் படுகொலை தொடர்பான விசாரணைகளை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் ரத்துபஸ்வல மூவர் படுகொலை தொடர்பான விசாரணைக ளையும் புதிதாக ஆரம்பிக்குமாறு இரகசியப் பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் கால்வில் பிளேஸில் அமைந்துள்ள புதிய நிதி மோசடிப்பிரிவு திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் ஜோன் அமரதுங்க, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நிதி மோசடி பிரிவின் பொறுப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வித்யாலங்கார, அமைச்சின் செயலாளர் ரி.என்.கே.பி. தென்னகோன் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க, படுகொலை மற்றும் காணாமற்போனதாக கூறப்படும் பிரதீப் எத்னெலிகொட ரத்துபஸ்வல படு கொலைகள், ரகர் விளையாட்டு வீரர் வkம் தாஜுதீன் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என அமைச்சர் ஜோன் அமரதுங்க பொலிஸ் மா அதிபரிடம் கேட்டபோதே இந்த விடயங்கள் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடாக மேற்படி தகவர்களை பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

இதேபோன்று பிரதீப் எத்னெலிகொட தொடர்பான விசாரணைகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. குறிப்பாக 2010.01.24 ஆம் திகதி மாலை இவர் காணமற் போயுள்ளதாக ஹோமாகம பொலி ஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட் டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். 48 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்ப ட்டுள்ளன.

இரண்டு சிம்கார்ட்டுகள் தொடர்பான விசாரணைகளும் நடத்தப்பட்டன. போலியான பெயர் வழங்கப்பட்டே சிம்கார்ட் பெறப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விசாரணையையும் புதிதாக ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விசாரணைகளும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படுகிறது. 2009.01.08 ஆம் திகதி அத்திடிய பகுதியில் வைத்து லசந்த படுகொலை செய்யப்பட்டார். கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.

பொலிஸார் விஞ்ஞான ஆய்வு ரீதியான விசாரணைகளை மேற்கொண்டனர். இதனடிப்படையில் இரண்டு பேர் கைதானதுடன் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலத்தினுள் மரணமானார். அடுத்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் கல்கிஸ்ஸ நீதிமன்றம் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறும் உத்தரவிட்டிருந் தமைக்கு அமைய நேற்று முன்தினம் இந்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப் பட்டுள்ளது. மேலும் ரத்துபஸ்வல மூவர் படுகொலை தொடர்பான விசாரணைகளும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.