செய்திகள்

லட்சுமி மேனனை ஓகே சொல்லவைத்த சிம்பு!

முன்னணிக் கதாநாயகியாக வலம் வரும் லட்சுமி மேனன் எப்படி அஜித்துக்கு தங்கையாக நடிக்க ஒப்புக்கொண்டார் என தமிழ் திரையுலகினர் ஆச்சரியப்பட்டலும் அவரை ஒகே சொல்ல வைத்தவர் சிம்பு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். சிம்பு தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே தனக்கு பிடித்த அஜீத்துக்காக சிம்பு இதை செய்தார் என சொல்லப்படுகின்றது .

உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி ‘வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து மீண்டும் ஒரு காதல் பிளஸ் நகைச்சுவை கலந்த படத்தை இயக்க திரைக்கதை எழுதிவிட்டார். இம்முறை ஒரு சென்னைப் பையன்இ கிராமத்திலிருந்து சென்னை வந்து வேலை செய்யும் பெண் ஆகிய இருவருக்குமான காதல்தான் களம். இந்தக் கதைக்கு சந்தானம் நகைச்சுவை பகுதிகளில் மட்டும் பங்களித்திருக்கிறார். கடைசி நேரத்தில் அவர் நடிக்கவும் செய்யலாம் என்கிறார்கள்.

கதாநாயகியாக லட்சுமிமேனன் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனால் இந்த ஜோடி சரிப்பட்டு வருமா? என்பதில் உதயநிதிக்குச் சந்தேகம் வரஇ காதும் காதும் வைத்த மாதிரி மூன்று நாட்கள் சில காட்சிகளைச் சோதனை முயற்சியில் எடுத்துப் பார்த்தனராம். அந்த மூன்று நாளில் சிம்பு பழகிய விதம் லட்சுமி மேனனுக்குப் பிடித்துவிட சிம்புவும் மேனனும் நல்ல நண்பர்கள் ஆகியுள்ளனர் .

இந்த நேரத்தில் தான் அஜித் தங்கையாக நடிக்கலாமா இல்லையா என லட்சுமி மேனன் குழம்பி நிற்கஇ சிம்பு அந்தக் குழப்பத்தைப் போக்கியிருக்கிறார் என்று சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.