செய்திகள்

லண்டனின் காணமற்போன மாணவிகளை தேடி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சர்வதேச நடவடிக்கை

 

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்காக சிரியா சென்றிருக்கலாம் என கருதப்படும் பாடசாலை மாணவிகள் மூவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு லண்டன் மசூதி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரும் மசூதிகளில் ஓன்றான ஈஸ்ட் லண்டன் மசூதி வெள்ளிக்கிழமை இரவு தொழுகையின் போது இந்த வேணடுகோளை விடுத்துள்ளது.
காணமற்போன மாணவிகளில் ஓருவரின் சகோதரி தங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கண்ணீர்விட்டழுததாக மசூதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நான் அவரிடம் ஏதாவது உதவி தேவையென்றால் எங்களை நாடுமாறு கேட்டேன், அதற்கு அவர் எங்களுடைய பிரார்த்தனைகளே தங்களுக்கு அவசியம், என தெரிவித்துவிட்டு அழத்தொடங்கிவிட்டார்,அது என்னை மிகவும் பாதித்தது என மசூதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட மாணவிகள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம், சிலர் அவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் எனமேலும் தெரிவித்துள்ள அவர் யார் அவர்களை பிரிட்டனை விட்டு வெளியேறுமாறு தூண்டியதாக தெரியாது என தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரும் குறிப்பிட்ட மாணவிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை இந்த விடயம் குறித்து பிரிட்டிஸ் பிரதமர்ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை பொலிஸார் மற்றும் எல்லைக்காலலுடன் மாத்திரம் போராடமுடியாது,ஒவ்வொருபாடசாலையும், பல்கலைக்கழகமும், சமூகமும் தாங்கள் இதில் ஆற்ற வேண்டிய பங்களிப்புள்ளதை உணரவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.