செய்திகள்

லண்டனில் இந்திய தத்துவஞானி பசவேஸ்வரா உருவச்சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

லண்டனில் நிறுவப்பட்டுள்ள இந்திய தத்துவஞானியின் உருவச்சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

12-வது நூற்றாண்டில் வாழ்ந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தத்துவ ஞானியும்இ சமூக புரட்சியாளருமான பசவேஸ்வரா, அடிமைத்தனத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து முதல் முறையாக குரல் கொடுத்தவர். சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க போராடிய இவருக்கு லண்டன் தேம்ஸ் நதிக்கரையோரம் சிலை வைப்பதற்கு முயற்சி எடுத்த லண்டன் லாம்பெத் நகர முன்னாள் மேயர் நீரஜ் பாட்டீல்இ இதற்காக திட்டக்குழுவிடம் அனுமதி பெற்றார். அதன்படி அங்கு தற்போது சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில்இ கடந்த இரு தினங்களுக்கு முன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த நீரஜ் பாட்டீல் தத்துவ ஞானி பசவேஸ்வராவின் உருவச் சிலையை திறந்து வைக்கும்படி அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடி ஜூன்-ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சிலையை திறந்து வைக்க நேரம் ஒதுக்கும்படி நீரஜ் பாட்டீல் கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி நீரஜ் பாட்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’12-ம் நூற்றாண்டின் தத்துவ ஞானிக்கு பிரதமர் மோடி தனது சிறப்பு மரியாதையை தெரிவித்தார். பசவேஸ்வராவைவும் அவரது தத்துவங்களையும் பெரிதும் மதிப்பதாகவும் மோடி கூறினார். பிக் பென் பெல் மெகா கோபுரம் மற்றும் பாராளுமன்றத்தின் பின்னணியில் அவரது சிலையை வைப்பதற்கு முயற்சி எடுத்த இங்கிலாந்துவாழ் இந்திய சமுதாயத்தினருக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்’ என்றார்.