செய்திகள்

லண்டனில் இன்று மாபெரும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பேரணி

பிரித்தானியாவில் இன்று திங்கட் கிழமை 6 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வினை பிரித்தானிய தமிழர் பேரவை மாபெரும் எழுச்சிப் பேரணியாக நடத்துகிறது.

இப் போரட்டம் அன்றைய தினம் பிற்பகல் 14 மணிக்கு March Starts: Whitehall Place by Northumberland Avenue (WC2N 5AE) – Nearest Station – Embankment, இல் ஆரம்பித்து, பிற்பகல் 05மணிக்கு Richmond Terrance (SW1A 2AT) – Westminster Station , இல் நிறைவுறும்.

தாயகத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடைபெற்று வரும் நிலையிலும் ஐ. நா. மனித உரிமைகள் சபை தனது விசாரணை அறிக்கையை பிற்போட்டுள்ள நிலையிலும் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டு விடுதலைக்கான தமது போராட்டமும் நீதிக்கான தமது போரரட்டமும் ஓய்ந்து விடவில்லை என்பதைஎன்பதை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்றைய கூட்டதில் முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்று மகத்தான மருத்துவ பணி ஆற்றிய மருத்துவர் Dr . துரைராஜா வரதராஜா கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=-FJmnfWgFD4&feature=youtu.be” width=”500″ height=”300″]