செய்திகள்

லண்டனில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பிரிட்டனில் வசித்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்துள்ளார்.
வட லண்டனில் எட்மன்ட் பகுதியில் வித்த அனுர காலகே என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் 5ஆம் திகதி இரவு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் அறைக்குள்ளே அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருக்கு நோய் நிலைமை அதிகரித்து மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. -(3)