செய்திகள்

லலித் மோடியுடன் சேர்ந்து ராஜஸ்தான் முதல்வரும் தோல்பூர் அரண்மனையை கபளீகரம் செய்தனர்

ஐ.பி.எல். ஊழல் முறைகேட்டில் சிக்கி பிரிட்டனில் வாழ்ந்துவரும் லலித் மோடியுடன் இணைந்து பிரசித்திபெற்ற தோல்பூர் அரண்மனையை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிங் கபளீகரம் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

“ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் அரண்மனை முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங்குக்கு சொந்தமானது என்று பாஜக கூறுவதை ஏற்க முடியாது. தோல்பூர் சமஸ்தானத்தின் சொத்துகள் இந்தியாவிடம் இணைக்கப்பட்டபோது அந்த அரண்மனையும் அரசுடன் இணைக்கப்பட்டது” என்று காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.