செய்திகள்

லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மாவுக்கு ஆதரவாக அருண் ஜேட்லி குரல்

ஊழல் புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க உதவியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக் கொண்டுள்ளதோடு, “மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவி செய்தேன்” என கூறியிருப்பதும் பெரும் சர்ச்சையை டெல்கி அரசியலில் எழுப்பியுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும்; மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் உறுதியான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

இந்த நிலையில், “சுஷ்மா ஸ்வராஜ் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதில் பாஜகவும் மத்திய அரசும் ஒருமனதான நிலைப்பாட்டில் உள்ளன. பாஜகவும் மத்திய அரசும் அவருக்கு துணை நிற்கும். இதில் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லை.” என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.