செய்திகள்

தலவாக்கலை லிந்துலை நகரசபை உறுப்பினா் கைது

தலவாக்கலை லிந்துலை நகரசபையின் பொது ஜன ஜக்கிய முன்னணியின் உறுப்பினர் பசான் ஹிம்மாலக்கவை இன்று பிற்பகல் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர் தலவாக்கலை முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கியதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து இவ்வாறு கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் காயம்பட்ட ஜானக சந்திரட்ண என்பவர் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளன ஜானக சந்திரட்ண கருத்து தெரிவிக்கையில்…

தலவாக்கலை நகரில் தான் முச்சக்கரவண்டி செலுத்துவதாகவும் முச்சக்கரவண்டியை தரிப்பிடத்தில் நிறுத்தும் போது குறித்த உறுப்பினரின் கடை மறைப்பதாக கூறி தன்னை தாக்கியதாக தெரிவித்தார்.

இவ்விடத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்தும் சாரதிகளிடம் குறித்த உறுப்பினர் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும்அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் மேற்படி உறுப்பினர் குறித்த வாகன தரிப்பிடத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு முயற்சித்து வருவதாக அப்பகுதி முச்சக்கரவண்டி சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

DSC07622

vlcsnap-2015-03-18-14h45m26s102