செய்திகள்

லவ் பண்ணின பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்ட நல்ல பையன் நான்

விஜய் டி.வி ‘ஈரோடு’ மகேஷ்கிட்ட ஒரு சிட் சாட்…

எப்படி இருக்கீங்க?

‘‘ரொம்ப நல்லா இருக்கேன். பெத்தவங்களுக்கு நல்ல மகனாகவும், மனைவிக்கு நல்ல கணவனாகவும், என் பொண்ணு அமிழ்தாவுக்கு நல்ல அப்பாவும், எல்லோரையும் சிரிக்க வெச்சிட்டும் இருக்கேன்!’’

இப்போ கையில என்ன புராஜெக்ட் இருக்கு?

விஜய் டி.வி.யில ‘நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’, ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குறேன். ‘சும்மா நச்சுனு இருக்கு’, ‘சிகரம் தொடு’ படங்களைத் தொடர்ந்து ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘ஜம்புலிங்கம் 3டி’ படங்களில் நடிச்சிருக்கேன். சீக்கிரமே ரிலீஸ்!

திருச்சியில இருந்து சென்னைப் பயணம் பற்றி?

திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில படிச்சிட்டு இருந்த சமயம் விசுவின் ‘அரட்டை அரங்கத்’துல பேசினேன். ‘எந்த இளைஞனைத் தேடி பத்தாண்டு காலமா நான் உலகம் முழுக்கத் தேடினேனோ, அவன் எனக்குக் கிடைச்சுட்டான்!’னு விசு சார் மேடையில் பாராட்டின அளவுக்கு என் பேச்சு அமைந்தது. தேவகோட்டை ராமநாதன் சொல்லி, ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்துகிட்டு பரிசு வாங்கினேன். எந்த ஒரு வாய்ப்பையும் சாதாரணமா எடுத்துக்கக் கூடாது என்பதை, அந்த நிகழ்ச்சி எனக்கு உணர்த்திச்சு!

உங்க மனைவி ஸ்ரீதேவி எப்படி இருக்காங்க?

‘‘ரொம்ப நல்லா இருக்காங்க. லவ் பண்ணின ஒரே ஒரு பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்ட நல்ல பையன் நான். எங்க பரம்பரையிலயே நான்தான் அதிக சேட்டைனு சொல்லுவாங்க. ஆனா, அந்த விஷயத்துல என் பொண்ணு அமிழ்தாகிட்ட நான் தோத்துப் போயிட்டேன். செம வாலு!’’