செய்திகள்

லாரன்சின் ராகவேந்திரர் கோவில்

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தீவிரமான ராகவேந்திரர் பக்தர் என்பது அறிந்ததே. இவர் சென்னையை அடுத்து அமைந்துள்ள திருமுல்லைவாயிலில் மிகப் பிரமாண்டமான முறையில் ராகவேந்திரர் கோயிலொன்றைக் கட்டியுள்ளார். இந்தக் கோவிலானது உலகமெங்கும் பிரபலமாகி உள்ளது. ராகவேந்திரர் கோவில் கட்டும் ஐடியாவை இவருக்கு வழங்கியவர் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் ஆவார்.

மகான் ராகவேந்திரர் பிறந்த நாளான பிப்ரவரி 25 ம் தேதியை தனது கோயிலில் மிக பிரமாண்டமான முறையில் கொண்டாட ராகவா லாரன்ஸ் திட்டமிட்டிருக்கிறார்.

ராகவேந்திரர் திருவீதி உலாவும் கூடவே காலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான நிகழ்சிகளும் நடக்க உள்ளன. இந்த வருடம் சுமார் ஐயாயிரம் பக்தர்களுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 2000 பேருக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

முனி – 3 படத்தின் டப்பிங் பணிகளில் பிசியாக இருக்கும் லாரன்ஸ் படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவரவிருக்கிறார.