செய்திகள்

லிங்குசாமி தயாரிப்பில் சூர்யா நடிக்கும் புதிய படம்

அஞ்சான் படத்துக்குப் பிறகு லிங்குசாமியும் சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள்.

இந்த முறை லிங்குசாமி படத்தை தயாரிக்கிறார். இயக்கப் போகிறவர் ஏற்கெனவே நாம் கூறியிருந்த சதுரங்க வேட்டை வினோத். லிங்குசாமிக்கும் சரி, சூர்யாவுக்கும் சரி, மறக்க முடியாத படமாக அமைந்தது அஞ்சான் படம். இந்தப் படத்தை விமர்சனம் என்ற பெயரில் கண்டபடி எழுதி நாசப்படுத்தினர் சமூக வலைத் தளங்களில். படத்தை இயக்கிய லிங்குசாமிக்கும் இதில் பெரிய மனவருத்தம்.