செய்திகள்

லிந்துவலை வைத்தியர்களும் ஊழியர்களும் பகிஸ்கரிப்பு

நுவரெலியா சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட லிந்துலை வைத்தியசாலையில் இன்று ஊழியர்களும் வைத்திய அதிகாரிகளும் தொழில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவ்வைத்தியசாலையில் ஊழியர் ஒருவர் தொடர்ச்சியாக வைத்திய அதிகாரிகளுடன் முரண்பாடான கருத்துகளை ஏற்படுத்தி வந்ததன் காரணமாகவும் அவரின் நடவடிக்கை மோசமாக இருந்ததன் காரணமாக சம்மந்தப்பட்ட ஊழியரை இடமாற்றம் செய்யுமாறு கூறி வைத்திய அதிகாரியும் ஏனைய ஊழியர்களும் நுவரெலியா மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் கடந்த 5ம் திகதி அனுப்பப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அதற்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இவர்கள் தொழில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது 12.03.2015 அன்று காலை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த பிரதேச மக்கள் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்தோடு வைத்தியர்களால் நோயாளிகளை பரிசோதனை செய்யாததன் காரணத்தினால் அதிகப்படியான நோயாளர்கள் ஏனைய வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

காணொளி இணைப்பு இங்கே: LINDULA HOSPITEL STRIKE

Linthuvalai (2) Linthuvalai (3) Linthuvalai (4)