செய்திகள்

லிபியாவின்மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்

லிபியாவின் பெருநகரங்களில் ஒன்றான ஷிர்டே நகரில் உள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றி விட்டதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

சிரியாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பல நகரங்களுக்கு செல்லும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த மின் நிலையத்தை கைப்பற்றியதன் மூலம் ஷிர்டே நகரில் இருந்து அரசு ஆதரவுப் படையினரை அடித்து விரட்டும் செயலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெற்றி பெற்றுள்ளதாக கருதப்படுகின்றது.

லிபியாவின் முன்னாள் அதிபரான மறைந்த முவம்மர் கடாபியின் சொந்த ஊரான ஷிர்டேவில் உள்ள விமான நிலையத்தை ஏற்கனவே கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்த ராணுவ வீரர்களை தலைதெறிக்க ஓடவிட்டனர். இந்நிலையில், இன்று காலை நடத்திய ஆவேச தாக்குதலில் இந்த மின் உற்பத்தி நிலையம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், இந்த திடீர் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.