செய்திகள்

லிபியாவிற்குள் சர்வதேச படைகள் நுழைய ஐ.நா அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள்

லிபியாவில் சர்வதே படைகள் நுழைவதற்கு ஐக்கிய நாடுகள் ஆணைவழங்கவேண்டும் என எகிப்து கோரியுள்ளது.
எகிப்திய ஜனாதிபதி அப்டெல் அல் சிசி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வேறு வழியில்லை நாங்கள் அவர்கள் எங்கள் குழந்தைகளின் தலைகளை துண்டிக்க அனுமதிக்க மாட்டோம் என அவர் பிரான்ஸ் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
கிளர்ச்சிக்காரர்கள் தலைநகர் திரிபோலியை கைப்பற்றியவுடன் டொப்புருக்கிற்கு தப்பியோடிய லிபியா அரசாங்கத்திற்கு உலக நாடுகள் ஆயுதங்களை வழங்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீவிரவாதிகளிடம் சிறைக்கைதிகளாக லிபியா மக்கள் வாழும்படி செய்துள்ளோம்,லிபியா மீதான சர்வதேச தலையீடு இன்னமும் ப+ர்த்தியாகவில்லை,
லிபியா மீது இன்னமும் விமானதாக்குதல் அவசியம், அனைத்து நாடுகளும் இவ்வாறான விமானதாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும், என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லிபியாவில் கடத்தப்பட்ட எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேர் தலைதுண்டிக்கப்பட்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்தே எகிப்திய ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
எகிப்து திங்கட்கிழை லிபியாவில் உள்ள ஐஎஸ் நிலைகள் மீது விமானதாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.