செய்திகள்

லிபியாவில் உள்ள ஐஎஸ் இலக்குகள் மீது எகிப்திய விமானங்கள் தாக்குதல்

21 எகிப்திய கிறிஸ்தவர்களின் தலையைகொய்யும் வீடியோ வெளியானதை தொடர்ந்து எகிப்து லிபியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
லுpபியாவில் உள்ள குறிப்பிட்ட அமைப்பின் முகாம்கள், பயிற்சிபாசறைகள் மற்றும் ஆயுத களஞ்சியங்களை முதல் தாக்குதலில் எகிப்திய விமானங்கள் இலக்குவைத்ததாகவும்,இதற்கு ஓரு மணி நேரத்திற்கு பின்னர் இன்னொரு விமான தாக்குதல் இடம்பெற்றதாகவும் எகிப்திய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள டெர்னா நகரில் உள்ள இலக்குகளே தாக்கப்பட்டதாக லிபியா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை எகிப்தி கிறிஸ்தவர்களை நிலத்தில் படுக்கவைத்து அவர்களது தலைகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் துண்டிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
லிபியாவில் கடந்த வருடம் பிடிக்கப்பட்ட கொப்டிக் கிறிஸ்தவ மதபிரிவினரே இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.ஐஎஸ் அமைப்பிற்கு விசவாசமான லிபியாவின் ஜிகாத்திகள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக்கிற்கு வெளியிலிருந்து வெளியாகியுள்ள முதலாவது வீடியோ இதுவென்பது குறிப்பிடத்தக்கது.