செய்திகள்

லொறி விபத்து – சாரதி படுங்காயம்

கித்துல்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து அட்டன் வழியாக ராகலை நோக்கி சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கித்துல்கலை கலுகல பகுதியில்  சிங்கள வித்தியால சிறுவர் பாடசாலை கட்டிடத்தின் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கித்துல்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் லொறியின் சாரதி படுங்காயங்களுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

bn

n10