செய்திகள்

லோலாவினால் மகிழ்ந்த த்ரிஷா

நடிகை த்ரிஷாவின் வாகனத்தினுள் அணில் ஒன்று புகுந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

நடிகை த்ரிஷா ஒரு விலங்கு பிரியை என்பது அனைவருக்கும் தெரியும். தன்னை போன்று பிறரையும் விலங்குகள் மீது பாசம் காட்டுமாறு வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பில் த்ரிஷாவின் வாகனத்தினுள் திடீர் என ஒரு குட்டி அணில் புகுந்தது. அணில் குட்டியை பார்த்த த்ரிஷா உற்சாகமாகி அதை தனது தோளில் போட்டு மகிழ்ந்தார். அதை அவர் புகைப்படம் எடுத்து தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அணிலுக்கு லோலா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் த்ரிஷா.