செய்திகள்

வங்காளதேசத்துடன் இன்று மோதல்: ஆஸ்திரேலிய அணி வெற்றி கணக்கை தொடங்குமா

சூப்பர் 10′ சுற்றின் 10-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ‘குரூப் 2’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் 8 ரன்னில் நியூசிலாந்திடம் தோற்றது. அந்த அணி வங்காளதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
பேட்டிங் வரிசையில் செய்த மாற்றமே ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தது. அதிரடி வீரர் வார்னர் தொடக்கத்தில் விளையாடுவதே அந்த அணியின் பலமாக கருதப்படுகிறது.

Steve Smith Press Conference
இன்றைய ஆட்டத்தில் ரன்ரேட்டை உயர்த்தும் விதமாக அதிரடியான ஆட்டம் மூலம் வெற்றி பெற அந்த அணி விரும்புகிறது. வங்காளதேச அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றது. இதனால் அந்த அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சவாலை சமாளிப்பது மொர்தாசா தலைமையிலான வங்காளதேச அணிக்கு கடினமே. ஆனாலும் அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.
இரு அணிகளும் மோதிய மூன்று போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்று இருந்தது.