செய்திகள்

வங்காள தேச வீரர்களில் அதிக ரன்கள் அடித்து தமீம் இக்பால் சாதனை

இந்தியா- வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாதுல்லாவில் நடைபெற்று வருகிறது. இன்று வங்காள தேசம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தமீம் இக்பாலும், இம்ருல் கெய்சும் களம் இறங்கினார்கள்.

தமீம் இக்பால் 7 ரன் எடுத்தபோது வங்காளதேச டெஸ்ட் வீரர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர் (3027 ரன்) என்ற சாதனையை பெற்றார். இதற்கு முன் ஹபிபுல் பஷார் 3026 ரன்கள் பெற்று முதல் இடத்தில் இருந்தார். இந்த சாதனையை இன்று தமீம் இக்பால் முறியடித்தார்.

பஷார் 2000-ம் முதல் 2008-ம் ஆண்டு வங்காள தேச அணியில் இடம்பெற்றிருந்தார். அவர் 50 போட்டிகளில் 3026 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 3 சதங்களும், 24 அரை சதங்களும் அடங்கும்.
தமீம் இக்பால் இன்றைய ஆட்டத்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர் இதுவரை 40 போட்டிகளில் விளையாடி 3039 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 7 சதங்களும், 17 அரை சதங்களும் அடங்கும்.
இவர்களுக்கு அடுத்து மொகமது அஸ்ரபுல் 2737 ரன்களுடன் 3-வது இடத்திலும், சாஹிப் அல் ஹசன் 2732 ரன்களுடன் 4-வது இடத்திலும், ரஹிம் 2557 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.