செய்திகள்

வடகொரியாவை தாக்கும் ஏவுகணையை ஏவி தென்கொரியா சோதனை

ஒட்டுமொத்த வடகொரியாவையும் தாக்கக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி தென்கொரியா இன்று சோதனை செய்தது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணைஇ 500 கி.மீ தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கியதாக தென்கொரிய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்நிகழ்வை அந்நாட்டு ஜனாதிபதி பார்க் கியுன் ஹை நேரடியாக பார்வையிட்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே போல் தாக்க வரும் எதிரி நாட்டின் ஏவுகணையை தாக்கி வீழ்த்தும் மற்றொரு ஏவுகணையையும் தென்கொரியா சோதித்துள்ளது.

இதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்படும் சூழ்நிலை மேலும் அதிகரித்துள்ளது. எனினும் இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா கருத்து கூற மறுத்துவிட்டது.