செய்திகள்

வடக்கின் பிரச்சினைகளை ஆராய கிளிநொச்சியில் பிரதமர் அலுவலகம்: ரணில் அறிவிப்பு

வடமாகாணத்தில் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை களை ஆராய்­வ­தற்கும் தீர்ப்­ப­தற்­கு­மென கிளிநொச்சியில் பிர­தமர் அலு­வ­லகம் அமைக்கப்­ ப­ட­வுள்­ளது. இங்­குள்ள நிலை­மைகள் தொடர்பில் ஆராய்ந்து ஆலோ­சனை வழங்­கு ­வ­தற்­காக விசேட பிர­தி­நி­தி­யொ­ருவரும் நிய­மிக்­கப்ப­ட­வுள்ளார் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்­டு­களில் கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் விசேட வேலைத்­ திட்­டங்களை மேற்­கொண்டு மக்­க­ளுக்­கான தேவை­களை நிறை­வேற்­ற­வுள்­ள­தாகவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பிட்­டுள்ளார்.

வட பகு­திக்­கான மூன்று நாள் உத்­தி­யோக பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ள பிர­த மர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்றைய தினம் கிளி­நொச்சிக்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் மீள்­கு­டி­யேற்றம்,பெண்கள் தலை­மை ­தாங்­கும் குடும்­பங்­களின் அபி­வி­ருத்தி,புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு செயற்­றிட்டம், மற்றும் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் இடம்­பெற்­றது.

இக்­கூட்­டத்தில் மீள்­கு­டி­யேற்றம் புணர்­வாழ்வு மற்றும் இந்து மத­வி­வ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், மகளிர் விவ­கார பிரதி அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், ஈ.பி.டி.பி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முரு­கேசு சந்­தி­ர­குமார், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சுரேஸ் பிரே­மச்­சந்­திரன்,செல்வம் அடைக்­க­ல­நாதன்,வினோ­நோ­த­ரா­க­லிங்கம், மாவட்ட செய­லாளார் சுந்­தரம் அரு­மை­நா­யகம், திணைக்­க­ளங்­களின் தலை­வர்கள், உயர் அதி­கா­ரிகள் பொது­மக்கள் எனப் பலர் கலந்து கொண்­டனர்.

இக்­கூட்­டத்தின் போது யுத்­தத்தின் பின்­ன­ரான சூழலில் கிளி­நொச்சி மாவட்­டத்தில் காணப்­படும் பல பிரச்­சி­னைகள் தொடர்­பாக பிர­த­மரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. குறிப்­பாக மீள்­கு­டி­யேற்றம், கண்­ணி­வெடி அகற்­றப்­ப­டாத நிலைமை, காணி உறு­திப்­பத்­தி­ரங்கள் இன்­மையால் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள், வீட்­டுத்­திட்­டங்கள் கிடைக்­கப்­பெ­றாமை, விவ­சாய நிலங்கள் விடு­விக்­கப்­ப­ட­டாமை, மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான வாழ்­வா­தார வச­திகள், புணர்­வாழ்வு அழிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­ட­வர்கள் சமு­கத்தில் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள், உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­திகள் வாழ்­வா­தார உத­விகள் தொடர்­பாக கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டன.

இவற்றைக் கவ­னத்திற் கொண்ட பிரமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவை தொடர்­பாக தீர்வை எட்­டு­வது தொடர்பில் கருத்து தெரி­விக்கும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்:

“யுத்­த­த­தனால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் சிறு­வர்­களின் நலன்­களை பாது­காக்கும் தேசிய ரீதி­யி­லான மத்­திய நிலை­யத்தின் தலைமை அலு­வ­லகம் கிளி­நொச்­சியில் அமைக்­கப்­படும். இதன் மூலம் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்கள்,பெண்­களை தலை­மை­யாக கொண்ட குடும்­பங்­களின் நலன்கள் பாது­காக்­கப்­ப­ட­வுள்­ளன.

வட மாகா­ணத்தில் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை ஆராய்­வ­தற்கும் தீர்ப்­ப­தற்­கு­மாக பிர­தமர் அலு­வ­லகம் ஒன்­றினை அமைக்­க­வுள்ளோம். அத்­துடன் இங்­குள்ள நிலை­மை­களை ஆராய்ந்து ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக விசேட பிர­தி­நி­தி­யொ­ருவர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார். இதன் மூலம் எதிர்­கா­லத்தில் முன்­னேற்­ற­க­ர­மான நிலை­மை­களை நோக்கிச் செல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.