செய்திகள்
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி முல்லைத்தீவிலிருந்து திருமலை நோக்கி பயணம்
சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் எனப் பிரகடனப்படுத்தி, பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி, மூன்றாவது நாளாக முல்லைத்தீவு நகரில் இருந்து சற்று முன்னர் ஆரம்பித்துள்ளது.
திருகோணமலை நோக்கி பேரணி தற்போது கொக்கிளாய் வீதிவழியாக சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் ஆக்கிரமிப்புக்குள்ளான நீராவியடி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளது.(15)