செய்திகள்

வடக்கிலுள்ள கூட்டுறவுப் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும்

வடக்கிலுள்ள கூட்டுறவுப் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகத் தொழிற்சங்கத்தின் செயலாளர் எஸ்.கெங்காதரன் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டுறவுப் பணியாளர்களை ஓய்வூதியத் திட்டத்தில் உள்வாங்கும் கொரிக்கை அடங்கிய மகஜரொன்றை மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரனிடம் கையளித்துள்ளோம்.

கூட்டுறவுப் பணியாளர்கள் இளைப்பாறிச் செல்லும் போது அவர்களுக்கு ஒரு தொகைப் பணம் மாத்திரமே வழங்கப்படுகின்றது.இந்தப் பணம் கூட்டுறவுப் பணியாளர்களின் மீதிக் காலத்திற்குப் போதாது.ஆகவே, வடக்கில் மக்களுக்குச் சேவையாற்றி வரும் கூட்டுறவுத் துறையினரை அரசாங்கம் ஓய்வூதியத் திட்டத்தில் உள்வாங்க வேண்டும் என்றார்.
யாழ்.நகர் நிருபர்-